இழப்பீடு குறித்து பரிசீலிக்கப்படுகிறது

கட்டாய மரணத் தண்டனையை அகற்றுவதற்கு 2023 சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது அவர்களின் குடும்பத்தினருக்குக் குற்றவாளிகள் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவது குறித்து, அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சட்டத்துறைத் துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார்.

தற்போதைய குற்றவியல் சட்டத்தின் கீழ், இது போன்ற இழப்பீடுகள் வழங்கப்படுவது குறித்து, நீதிமன்றமே முடிவு செய்கின்றதே தவிர, மற்ற தரப்பு அல்ல.

புதிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றபட்டது மூலம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு குற்றவாளிகள் இயல்பாகவே இழப்பீட்டு தொகையை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக ராம் கர்ப்பால் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS