லோரி கவிழ்ந்ததில் ஆடவர் ஒருவர் பலி

இன்று விடியல்காலை 3.30 மணியளவில் ஏற்பட்ட சாலை விபத்தில் கிள்ளான் கம்போங் ஜாவாவை சேர்ந்த 33 வயது ஆர் சுகுனாரன் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிர் இழந்தார்.

காராக் நெடுஞ்சாலையில் புக்கிட் திங்கி செல்லும் வழியில் திடீரென லோரி கவிழ்ந்ததில், லாரியில் பயணித்த இருவரும் அதன் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டதால், ஒருவர் சம்பவம் நடந்த இடத்திலேயே பலியானதுடன், மற்றொருவரான கோபல்லா ராஜூவிற்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டு பெந்தோங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெந்தோங் மீட்புப்பணி நடவடிக்கைக் குழுவின் அதிகாரி முகமட் பின் இஷாக் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS