விலங்குகளோடு மனிதர்களால் தொடர்புக்கொள்ள முடியுமா!!

விலங்குகளுடனான மனித தொடர்பு பல நூற்றாண்டுகளாகவே உலகம் முழுவதும் உள்ளது. பறவைகள், வேட்டையாடுபவர்கள் என பலவற்றோடு பேசுவதற்கும் இணைந்து வாழ்வதற்கும் பழங்குடியினர், தங்களின் தகவல் தொடர்புத் திறனை நம்பியிருந்தார்கள். அத்தகைய தகவல் தொடர்புத் திறனால், அவர்கள் பல வகையான விலங்குகளுடன் நிலத்தைப் பகிர்ந்து கொண்டு வாழ்ந்து வந்தனர். அங்கிருந்துத் தொடங்கி, இறுதியில் நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற விலங்குகளைத் தத்தெடுத்து வளர்க்கவும் முடிந்தது. விலங்குகளுடன் பேச முடியும் என்று கூறும் நபர்கள் கற்பனையான இலக்கிய பாத்திரங்கள் அல்ல. மாறாக, அத்தகைய மனிதர்கள் உண்மையிலேயே நம்முடன் இருக்கிறார்கள்.

பெரும்பாலான செல்லப்பிராணி உரிமையாளர்களைப் போலவே, கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜோன் ரேங்க்வெட் விலங்குகளை நேசிப்பவர் ஆவார். ஆனால், அவருக்கும் அவரின் செல்லப்பிராணிகளுக்கும் இடையில் உள்ள அந்த இணைப்பு அரவணைப்பையும் தாண்டி அதற்கும் அப்பாற்பட்டது. விலங்குகளுடன் மனிதரால் பேச முடியுமா? என்று அவரிடம் கேட்ட போது, தம்மால் விலங்களுடன் தொடர்பு கொள்ள முடிகின்ற போது ஒவ்வொருவராலும் முடியும் என்று கூறினார்.

ஜோன் ரேங்க்வெட், தாம் வளர்க்கும் நாய்கள், பூனைகள் மற்றும் குதிரைகளுடன் தொடர்புக்கொள்வது மட்டுமல்லாமல், மக்களை வனவிலங்கு பயணங்களுக்கு அழைத்துச் செல்லும் அவர், சிங்கங்கள், டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் என பல மிருகங்களுடன் பேசுவதாக குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பான காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் நிறைய காணப்படுகின்றன.

மேலும், ஒரு சர்வதேச அளவில் புகழ்பெற்ற விலங்கு தொடர்பாளரான ரேங்க்வெட் விலங்குகளுடன் பேசுவது என்பது எவரும் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு திறமை என்று கூறினார். அனிமல் கம்யூனிகேட்டர் என்ற அவரால், மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளைப் பற்றி மேலும் அறிவதற்கும், காணாமல் போன விலங்குகளைக் கண்டுபிடிப்பதற்கு உதவுவது மட்டுமல்லாமல், சிக்கலான உடல்நலப் பிரச்னைகளைக் கொண்டுள்ள விலங்குகளைக் குணப்படுத்தவும் முடியும்.

விலங்குகளோடு தொடர்புக்கொள்ளும் பெரும்பாலான நேரங்களில், விலங்குகள் தங்களின் கதைகளைச் சொல்லும் வேளையில், ​​அவற்றிற்கு ஒரு பெரிய மனத் தளர்வு ஏற்படும்  போது அதன் வெளிப்பாடாக  கொட்டாவி விடுகின்றன.

எனவே, மனிதர்களால் விலங்குகளுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பது முற்றிலும் உண்மையாகும். இன்றைய நிலையில், ஆராய்ச்சியாளர்கள் விலங்குகளின் தொடர்பைப் படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் ஏற்ற முறைகளை உருவாக்குவதில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். மேலும், மனிதர்கள் விலங்குகளுடன் வரையறுக்கப்பட்ட வழிகளில் தொடர்புகொள்வதற்கு ஏற்கனவே பல எடுத்துக்காட்டுகளும் உள்ளன. விலங்குகளோடு மனதார தொடர்புக்கொள்ளும் போது, அது உண்மையிலேயே சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஒரு உணர்ச்சிகரமான அனுபவமாக அமையும் என்பது திண்ணம்.

WATCH OUR LATEST NEWS