எந்தப் பலனும் தராமல் வீணாகி விடாது!

விவசாயி ஒருவர், சீன மூங்கில் விதைகளை விதைத்தார், தவறாமல் தண்ணீர் பாய்ச்சினார். ஒன்று, இரண்டு, மூன்று என்று வருடங்கள் ஓடியும், எந்த வளர்ச்சியும் இல்லை. பூமிக்கு மேல் எதுவும் மாற்றம் தெரியவில்லை. நான்கு, ஐந்து வருடங்கள் வேகமாக நகர்ந்தன. எல்லோரும் அந்த விவசாயியை கேலியாக, சந்தேகமாகப் பார்த்து, வீண் முயற்சி என்று கேலி செய்தார்கள்.

ஆனால், அவர் பெறுமையாக இருந்தார். ஐந்தாவது வருடம் தொடங்கியது. நிலத்தின் மேற்பரப்பில் சின்னஞ் சிறிதாக எட்டிப் பார்த்தது மூங்கில் செடியின் முதல் இலை. அடுத்த ஆறே வாரத்தில் அசுர வளர்ச்சிக் கொண்டு, எண்பது அடி உயரத்தில் கம்பீர்மாக எழுந்து நின்றது. ஆறு வாரத்தில் இந்த அளவிற்கு அசுர வளர்ச்சி அடைய வேண்டுமென்றால், 4 ஆண்டுகள் அந்த விதைகள் பூமிக்குள் தங்கள் வேரினைப் பொறுமையாக நிலைப் படுத்தி இருக்க வேண்டும் என்பது அப்போது தான் மற்றவர்களுக்குப் புரிந்தது.

பல நேரங்களில் இப்படித்தான், உங்களது உழைப்பும், முயற்சிகளும் எந்தப் பலனும் தராமல் வீணாக்கிக்கொண்டிருப்பதாக தோன்றும். ஆனால், சீன மூங்கில் போல் மாற்றம் உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

மூங்கில் விதை போட்ட விவசாயிக்கு, அது ஐந்து வருடங்களுக்குப் பிறகு தான் பலன் தரும் என்ற தகவல் தெரிந்திருந்தது. அதோடு, பொறுமைக்கு பலன் பல மடங்கு பெரிதாக இருக்கும் என்பதையும் உணர்ந்தார் அவர். அதனால் பலன் பெரிதாக கிடைத்தது. மகிழ்ச்சியும் மலர்ந்தது.

உங்கள் இலக்கு என்ன என்பதை நீங்கள் முழுமையாக உணர்ந்திருந்தால், உங்களால் நிச்சம் பொறுமையாக இருக்க முடியும். லட்சியத்திற்கான அடிப்படைப் பணியைத் தொடங்கி விட்டு, அடுத்தடுத்த உங்களின் செயல்களைப் பொறுமையாக அதாவது Active Patience ஆகச் செயல்படுத்த முடியும். அப்படிச் செயல்படும் போத, அந்த பொறுமையே அதன் வெற்றிக்கான மூலதனமாக அமையும்

WATCH OUR LATEST NEWS