இந்த ஆண்டும் august மாதம் முதல், பொதுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள், தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு விமான டிக்கெட் உதவியை அரசாங்கம் வழங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் அறிவித்துள்ளார்.
இந்த உதவியானது தீபகற்ப மலேசியாவில் உள்ள பொதுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் சபா மற்றும் சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.