நேற்று இரவி 10 மணி முதல் வலைத்தளங்களில் பரவி வந்த 30 வினாடி காணொலி தொடர்பாக 35 வயது லோரி ஓட்டுனர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக கோலா மூடா வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் ஜைதி சே ஹாசன் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 1 ஆம் நாள், மாலை 6 மணி அளவில் புக்கிட் கோபா ஓய்வுவெடுக்கும் நிறுத்ததில் உள்ள பெட் ரோல் நிலையத்தில், லோரி ஓட்டுனருக்கும், நான்கு சக்கர கனரக வாக ஓட்டுனருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டினால், அந்த லோரி ஓட்டுனர் தனது லோரியில் இருந்த பாரங் கத்தியைக் காட்டியதாக போலீசாரிடம் வாக்களித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அந்த நான்கு சக்கர கனரக வாகன ஓட்டுனர் தன்னை மிரட்டிய பிறகே தாம் அந்தப் பாராங் கத்தியை எடுத்ததாகவும் போலீசார் அந்த நான்கு சக்கர கனரக வாகன உரிமையாளரை விசாரணைக்காக தேடி வருவதாகவும் சைடி சே ஹசான் தெரிவித்தர்.
மேலும் சம்பம் நடந்த அன்று, அது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.