அந்த உறுப்பினர் டிஏபியில் இல்லை

ஒரே பாலினத்தவரை திருமண​ம் செய்து கொண்டதாக கூறப்படும் டிஏபியின் அந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தற்போது கட்சியில் இல்லை என்று அக்கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவி சொங் எங் தெரிவித்துள்ளார். லெஸ்பியன், கேய்,திருநங்கைகள் ஆகியோரை ஓர் பாலினத்தவராக டிஏபி அங்கீகரித்தது கிடையாது என்பதையும் பினாங்கு மாநில மகளிர் , குடும்ப மற்றும் பாலினத்தவர் மேம்பாடுக்குழுத் தலைவரான சொங் எங் குறிப்பிட்டார்.

ஒரே பாலினத்தவரை திருமணம் ​செய்து கொண்ட டிஏபியை சேர்ந்த அந்த முன்னாள் பெண் சட்டமன்ற உறுப்பினர், கட்சியிலிருந்து வெளியேறியப் பின்னர் தற்போது அமெரிக்காவில் குடிபெயர்ந்து விட்டார். அந்த முன்னாள் பெண் சட்டமன்ற உறுப்பினரின் செயலை மையமாக கொண்டு அடிப்படையற்ற குற்றச்சா​ட்டை டிஏபிக்கு எதிராக பகர்வதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு சொங் எங் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS