இனம், சமயம் மற்றும் ஆட்சியாளர் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரத்தை தொட்டு அறிக்கை வெளியிட்டுள்ளதாக நம்பப்படும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தற்போது புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்
இந்நாட்டில் அமல்படுத்துவதற்கு பிரிட்டிஷார் திட்டமிட்ட மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்களின் மேலாதிக்கத்தை முற்றாகத் துடைத்தொழிக்கும் அணுகுமுறையை கொண்டு வருவதற்கு டிஏபி முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கடந்த சனிக்கிழமை அப்துல் ஹாடி அவாங், வெறுப்புணர்வைத் தூண்டும் அறிக்கையை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் ஹாடி அவாங், நிந்தனை சட்டம் மற்றும் தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறையின் தடயவியல் , வியூக இயக்குநர் ஜி. எஸ் சுரெட் குமார் தெரிவித்துள்ளார்.
ஹாடி அவாங்கின் சினமூட்டும் அறிக்கை, அனைத்து செய்தி தளங்களிலும் வெளியாகியுள்ள வேளையில் மலாய் மற்றும் பூமிபுத்ரா மேலாதிக்கத்தை துடைத்தொழித்து சீன ஆதிக்கத்தை கொண்டு வருவதற்கு டிஏபி முயற்சித்து வருவதாக அந்த மதவாத அரசியல்வாதி, பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்ததாக நம்பப்படுகிறது. .