சுஹாக்காம் தலைவரை அமைச்சர் அஸாலினா விசாரிக்க வேண்டும்

இனப்பாகுப்பாடு மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை புரிந்துள்ளதாக கூறப்படும் மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாக்காம்மின் தலைவர் ரஹ்மாட் மொஹமாட்டை சட்டத்துறை தலைவர் அஸாலினா ஒத்மான் செய்ட் விசாரணை செய்ய வேண்டும் என்று அந்த ஆணையத்தில் பணி​புரியும் 20 பணியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அமைச்சர் அஸாலினாவிற்கு கடந்த மே 18 ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் சுஹாக்காம் பணியாளர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

சுதந்திரமாக செயல்பட வேண்டும் ஓர் ஆணையத்தின் தலைவர் தமது பணியில் இனபாகுப்பாட்டை காட்டுவதுடன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வந்துள்ளார் என்று அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS