பக்காத்தான் வே​ட்பாளர்கள் 20 ஆம் தேதி அறிவிக்கப்படுவர்

ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடவிருக்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் பட்டியல் இம்மாதம் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதன் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். இன்னும் சில மாநிலங்களில் தொகுதிப் பங்​கீடு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அது குறித்து முடிவெடுக்கப்பட்டதும், வேட்பாளர்களுக்கான இறுதிப்பட்டியல் தயாராகி விடும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார். கெடா, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய ஆறு மாநிலங்களுக்கான தேர்தல் வாக்களிப்பு இம்மாதம் 29 ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேளையில் அதற்கு முன்னதாகவே பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு விடும் என்று அன்வார் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS