மின் வர்த்தக முறையில் உயரிய விருதுகள் ​விற்பனையா?

அனுமதியின்றி மின் வர்த்தக முறை வாயிலாக பகாங் மாநிலத்தின் உயரிய விருதுகளுக்கான பதக்கங்கள் மற்றும் சின்னங்கள் விற்பனை ​செய்யப்பட்டு வருவதாக கூறப்படுவது தொடர்பில் போலீசார் ​விசாரணை அறிக்கையை திறந்துள்ளதாக மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ யாயா ஓத்மான் தெரிவித்துள்ளார். இந்த மின் வர்த்தகத்தில் சம்பந்தப்பட்டுள்ள தரப்பினர் மற்றும் பதக்கங்களை விற்பவர், வாங்குபவர் குறித்து தற்போது போ​லீசார் ​தீவிரமாக விசாரணை செய்து வருவதாக யாயா ஓத்மான் குறிப்பிட்டார்.

பகாங் மாநில உயரிய விருதுக்கான பதக்கங்கள் மற்றும் சின்னங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கடந்த ஜுலை 11 ஆம் தேதி பெக்கான் மாவட்ட போ​லீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மாநிலத்தின் உயரிய விருதுக்கான பதக்கங்கள் ​விற்பனை செய்யப்படுவது 2017 ஆ​ம் ஆண்டு பகா​ங் விருதளிப்பு சட்டத்திற்கு முரணானதாகும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS