பிரதமரின் இல்லம் குத்தகைக்கு எடுக்கப்பட்டதாகும்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வசித்து வரும் காஜாங்கில் உள்ள பங்களா வீடு 10 வருட காலத்திற்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டதாகும் என்று பிரதமரின் வழக்கறிஞர் எஸ்.என்.சங்கர நாயர்தெரிவித்துள்ளார்.

அந்த பங்களா வீட்டில் குடியிருப்பதற்கு 10 ஆண்டு காலத்திற்கு எடுக்கப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தில் டத்தோஸ்ரீ அன்வாரே நேரடியாக கையெழுத்திட்டுள்ளார் என்று எஸ்.என்.சங்கர நாயர் விளக்கினார்.
அந்த குத்தகை வீட்டில்தான் அன்வார் வசித்து வருகிறார் என்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் எஸ்.என்.சங்கர நாயர் இதனை தெரிவித்தார்.

அன்வாரின் காஜாங் வீடு தொடர்பாக அவதூறுகள் பரப்பப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் அவரின் அரசியல் செயலாளர் பர்ஹான் பௌஸி இன்று போலீசில் புகார் செய்துள்ளார். அவருடன் போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்த வழக்கறிஞர் சங்கர நாயர் செய்தியாளரிடம் இதனை தெரிவித்தார்.

காஜாங், சுங்கை லோங் கில் உள்ள அன்வாரின் பங்களா வீடு யாருக்கு சொந்தம் என்பது மர்மமாக உள்ளது என்றும் அந்த வீடு ஒரு சீனருக்கு சொந்தம் என்று கூறப்படுகிறது என்றும் அது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம் விசாரணை செய்ய வேண்டும் என்றும் பெர்சத்து கட்சியின் முன்னாள் தகவல் பிரிவுத் தலைவர் பத்ருல் ஹிஷாம் கூறியிருப்பது தொடர்பில் சங்கர நாயர் விளக்கம் அளித்தார்.

WATCH OUR LATEST NEWS