ஆறாம் படிவம், இனி பல்கலைக்கழக முந்தைய கல்லூரியாகும்

இடைநிலைப்பள்ளியில் ஆறாம் படிவம், இனி பல்கலைக்கழக முந்தைய கல்லூரி என்ற பெயர் மாற்றம் காண்பதாக கல்வி அமைச்சர் பத்லினா சிடெக் அறிவித்துள்ளார்.

ஆறாம் படிவம் என்பது தனித்துவமான கல்வி முறை என்பதால் ஆறாம் படிவத்திற்கு பொருத்தமான பெயர் ஆராயப்பட்டதில் இனி அதனை பல்கலைக்கழக முந்தைய கல்லூரி என அழைப்பதே சிறந்தது என்று கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. இந்த புதிய பெயர் உடனடியாக அமலுக்கு வருகிறது என்று பத்லினா சிடெக் குறிப்பிட்டார்.

ஆறாம் படிவத்திற்கு தலைமையேற்றுள்ள பள்ளி முதல்வர், இனி கல்லூரி இயக்குநர் என்றும் முதிர் நிலை உதவி ஆசிரியர் உதவி இயக்குநர் என்றும் அழைக்கப்படுவார்கள் என்று அமைச்சர் விளக்கினார்.

பல்கலைக்கழகத்திற்கு செல்ல மாணவர்களை தயார்படுத்தும் வகுப்பாக ஆறாம் படிவம் விளங்குவதால் அதனை இடைநிலைக்கல்வி வரிசையில் பார்க்க வேண்டாம் என்றும் உயர் கல்விக்கூடம் போன்ற மதிப்பில் அதன் அந்தஸ்து உயர்த்தப்பட வேண்டும் என்று அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS