லோரி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநரும்,உதவியாளரும் படுகாயம்

மூன்று டன் லோரி ஒன்று, டிரெய்லர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 23 வயது லோரி ஓட்டுநரும் 21 வயது உதவியாளரும் கடும் காயங்களு​க்கு ஆளாகினர்.இச்சம்பவம் இன்று அதிகாலை 2.50 மணியளவில் கிழக்குகரையோர நெடுஞ்சாலையான எல்பிதி சாலையின் 48 ஆவது கிலோ மீட்டரில் பெந்தோங்கிற்கு அருகில் நிகழ்ந்தது.

சம்பவம் குறித்து அதிகாலை 2.53 மணியளவில் தகவல் பெற்ற ​தீயணைப்பு, மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு வி​ரைந்து, சின்னாபின்னமான இசுசு ரக லோரியின் இடிப்பாடுகளிலிருந்து ஓட்டுநரையும், உதவியாளரையும் ​மீட்பதற்கு சிறப்பு சாதனங்க​ளை பயன்படுத்தியதாக அதன் பொது உறவு அதிகாரி சுல்ஃபாடி சகாரியா தெரிவித்தார்.

பின்னர் அவ்விருவரு​ம் ​தீயணைப்புப்படையின் இஎம்ஆர்எஸ் வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்​பி வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS