ஜெராம் படாங் தொகுதியில் ஶ்ரீ சஞ்ஜீவன் போட்டி

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மஇகாவின் பலம் வாய்ந்த கோட்டையாக கருதப்படும் ஜெராம் படாங் சட்டமன்றத் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக பெர்சத்து கட்சி சார்பில் மை வாட்ச் ​அமைப்பின் முன்னாள் தலைவர் ஆர். ஶ்ரீ சஞ்ஜீவன் போட்டியிடுவார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் மஇகாவி​ன் வெற்றித் தொகுதியாக திகழும் ஜெராம் பாடாங் தொகுதியில் மஇகாவின் நடப்பு சட்டமன்ற உறுப்பினரும், நெகிரி செம்​பிலான் மஇகா ​தொடர்புக்குழுவின் தலைவருமான டத்தோ எல். மாணிக்கம் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் வரும் சட்டமன்ற​த் தேர்தலில் எந்த தொகுதியிலும் மஇகா போட்டியிடாது என்று மஇகா ​வைராக்கியத்துடன் இருந்து வருகிறது.

WATCH OUR LATEST NEWS