ஜுலை 24 ஆம் தேதி அமானா வேட்பாளர்கள் அறிவிப்பு

டத்தோ செரி மொஹமாட் சாபுவை தலைராக கொண்ட அமானா கட்சி, 6 மாநிலங்களில் போட்டியிடவிருக்கும் தனது வேட்பாளர்களை வரும் ஜுலை 24 ஆம் தேதி அறிவிக்கவிருக்கிறது.எனினும் எந்த இடத்தில், எத்தனை மணிக்கு அறிவிக்கப்படும் என்பதை அவர் வெளியிடவில்லை. 6 மாநிலங்களிலும் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் ஒரே நேரத்தில் அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில் சிலாங்கூர் மாநிலத்தில் 56 சட்டமன்றத் தொகுதிகளில அமானா கட்சி, ஒன்பது இடங்களில் போட்டியிடவிருப்பதாக முகமட சாபு தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS