கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் வரும் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று பாஸ் கட்சி அறிவித்துள்ளது. சனூசிக்கு எதிராக இரண்டு தேச நிந்தனை குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போதிலும் அவரை வேட்பாளராக நிறுத்துவதில எந்த மாற்றமும் இருக்காது என்று பாஸ் கட்சித் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மாட் தெரிவித்துள்ளார்.
சனூசியின் வழக்கினால் பெரிக்காத்தான் நேஷனலுக்கான ஆதரவு திடீரென்று பெருகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், சனூசியை வேட்பாளாக நிறுத்துவதென நேற்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக துவான் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
அதேவேளையில் பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் இயக்குநர் என்ற முறையில் தேர்தல் பிரச்சாரங்களை சனூசி தொடர்ந்து முன்னெடுப்பார் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக துவான் இப்ராஹிம் மேலும் விவரித்தார்.