தேயிலை மற்றம் ஆரஞ்சுஜுஸ் பானம் பாக்கெட்டுகளை பயன்படுத்தி போதைப்பொருளை கடத்தி வந்த கும்பலை ஜோகூர் மாநில போலீசார் முறியடித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை குளுவாங்கில் மூன்று வெவ்வேறு இடங்களில் போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் 43 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
22 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நான்கு நபர்களும் மாலை 6.20 முதல் இரவு 9.40 மணி வரை நடத்தப்பட்ட சோதனையில் பிடிபட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமாருல் சாமான் மாமாட் தெரிவித்தார்.
20 லட்சத்து இரண்டாயிரத்து 42 போதைப்பித்தர்கள் பயன்படுத்தக்கூடிய 43 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் , போதைப்பொருளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாக நம்பப்படும் 6 வாகனங்கள், தங்கள் ஆபரணங்கள் மற்றும் 11 ஆயிரம் வெள்ளி ரொக்கம் ஆகியவை அந்த கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கமாருல் சாமான் குறிப்பிட்டார்.