நியூசிலாந்து, ஓக்லேன்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று வெல்லிங்டோனில் உள்ள மலேசிய தூதரகம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தில் மிகப்பெரிய நகரான ஆக்லாந்துசிட்டியில் ஒரு கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் இதுவரையில் இருண்டு உயிரிழந்தனர். ஆறு பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுட்டு வீழ்த்தினர்.
பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.