வரும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் காஜாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மக்களின் உரிமைகளுக்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் அருட்செல்வன் உயர் தகுதி வேட்பாளர் ஆவார் என்று பிஎஸ்எம் கட்சியின் தோற்றுநரும், அதன் முன்னாள் தலைருமான முகமட நாசீர் ஹஷிம் தெரிவித்தார். மக்கள் மத்தியில் அருள் என்று அழைக்கப்படும் மலேசிய தேசிய பல்லைக்கழகத்தின் பட்டதாரியாவார். காஜாங் மக்களுக்கு சேவையாற்றுவதில் தம்மை நீ நீண்ட காலமாகவே பிணைத்துக்கொண்டவர் ஆவார்.