தோட்டத் தொழிலாளி ஒருவர் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டு செம்பனை தோட்டத்திற்குள் சடலம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்நிய நாட்டவர் என்று சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய அந்த தொழிலாளியின் சடலம் தவாவ், மெரோடாய் என்ற இடத்திலுள்ள செம்பனை தோட்டத்திற்குள் கிடந்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜாஸ்மின் உசேன் தெரிவித்தார். அந்த தொழிலாளியின் உடலில் பல்வேறு பகுதிகளில் ஆழமான வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.