அனைத்துலக அழுங்கு கடத்தல் கும்பலுடன் தொடர்பு உடையவர்கள் என்று நம்பப்படும் 2 அமலாக்க அதிகாரிகள் உட்பட 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் ஆசம் பாக்கி தெரிவித்தார். அழுங்குகளின் செதில்களை இலக்காக கொண்டு அவற்றை கடத்தும் இந்த உள்ளூர் கும்பலுக்கு எதிராக ஒப் ஜாகுவார் சோதனை நடவடிக்கையை எஸ் பி ஆர் எம் தொடங்கியதாக ஆசம் பாக்கி விளக்கினார். 2 கொடியே 30 லட்ச வெள்ளி பெருமானவுள்ள அழுங்கு கடத்தல் தொடர்பான விசாரணை அறிக்கை தயாராகிவிட்டதாக ஆசம் பாக்கி தெரிவித்தார்.