இடைநிலைப்பள்ளி மாணவி ஒருவர் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து மரணம் முற்றார். இச்சம்பவம் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் மலாக்கா, டுரியன் இலை என்ற இடத்திலுள்ள இடைநிலைப்பள்ளியில் நிகழ்ந்தது. முதலாம் படிவத்தில் பயின்ற 13 வயதுடைய மாணவி பள்ளி கட்டடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்ததாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாட்டிட் தெரிவித்தார். உடற்பயிற்சிக்கு உடையணிந்திருந்த அந்த மாணவியின் இறப்பு, திடீர் மரணம் என்று போலீசார் வகைப்படுத்தி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த மாணவி விழுந்தாரா ? குதித்தாரா ? என்பது குறித்து நேரில் பார்த்த சாட்சி இல்லை என்று கிறிஸ்டோபர் குறிப்பிட்டார்.