பக்காத்தான் ஹரப்பான் ஆட்சியில் தாம் பிரதமராக இருந்தபோது, அம்னோவை சட்டவிரோத கட்சியாக அதன்பதிவை ரத்து செய்வதற்கு தாம் திட்டம் கொண்டிருந்ததாக கூறப்படும் குற்றசாட்டை நிரூபிக்குமாறு முன்னாள் பிரதமர்துன் மகாதீர் முகமட் சவால் விடுத்துள்ளார். உண்மையிலேயே அம்னோவை தடை செய்யும் நோக்கத்தை தாம் கொண்டிருந்ததில்லை என்று துன் மகாதீர் விளக்கினார். அப்படி திட்டம் ஏதும் தாம் கொண்டிருந்தாக கூறுகின்ற தரப்பினர் அதனை ஆதாரத்துடன் நிரூபிக்கவேண்டும் என்று துன் மகாதீர் கேட்டுக்கொண்டார்.