கெடா மாநிலத்தில் அரிய மண் கனிம வளம் களவாடப்பட்டதின் தொடர்பில் இதுவரையில் 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம்-மின் தலைமையானையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார். அதே வேளையில் இந்த கனிம வள களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் ஒரு சாட்சியாக விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று ஆசம் பாக்கி விளக்கினார். தவிர, இந்த கனிம வள திருட்டு தொடர்பில் சீன நாட்டை சேர்ந்த இரு நபர்கள் தேடப்பட்டுவருவதாக ஆசம் பாக்கி குறிப்பிட்டார்.