அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஆறு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவிருக்கும் முடா கட்சி, தனது தேர்தல் கொள்கை அறிக்கையை இன்று வெளியிட்டது. கெர்க்டஸ் ஹித்தம் முடா 2 என்ற பெயரில் முடா கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கையை அதன் தலைவர் சையது சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் வெளியிட்டார். மூடாவின் கருப்பறிக்கை 2 என்ற அந்த தேர்தல் கொள்கை அறிக்கை, சாத்தியமான அணுகும் முறையை உள்ளடக்கி இருப்பதாக சையத் சாதிக் குறிப்பிட்டார். மாநில அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான செயல்பாட்டிற்க்கு தேவையான பரிந்துரைகளை இது முன்னெடுத்திருப்பதாக சையத் சாதிக் தெரிவித்தார்.