தோள்பட்டையில் ஏற்பட்ட பழைய காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், டாமன்சாரா நிபுணத்துவ மருத்துவமனை 2 இல் இருந்து இன்று வியாழக்கிழமை ஜோகூருக்கு திரும்பினார்.
கடந்த சில தினங்களாக அந்த மருத்துவமனையில் தங்கி தாம் சிகிச்சை செய்து கொண்ட போது, தமக்கு சிறப்பான முறையில் மருத்துவ கவனிப்பை வழங்கிய அம்மருத்துவமனையின் நிபுணர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் சுல்தான் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளார்.