தந்தையும், மகனும் சென்ற மோட்டார் சைக்கிள், மரக்கட்டைகளை ஏற்றி வந்த லோரியுடன் எதிரும் புதிருமாக மோதிக் கொண்ட கோர சாலை விபத்தில் இருவரும் மாண்டனர். இச்சம்பவம் நேற்று மாலை 6.15 மணியளவில் கிளந்தான், ஜாலன் குவா முசாங் – ஜெலி சாலையின் 37 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது. 55 வயது மிஹாமாட் சிகி முஹமாட் அலி மற்றும் அவரின் 15 வயது மகன் முஹமாட் ஹஸ்புல்லா ஆகியோரே இச்சம்பவத்தில் மண்டதாக அடையாளம் கூறப்பட்டது.
தலையிலும் உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளான தந்தையும் மகனும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக குவா மூடாங் மாவட்ட போலீஸ் தலைவர் சிக் சூன் ஃபு தெரிவித்தார்.