அந்தோணி கெவின் மொரைஸ் வழக்கில் மேல்முறையீடு

அரசாங்க துணை பப்ளிக் பிராசிகியுட்டர் டத்தோ அந்தோணி கெவின் மொரைஸ் கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒரு மருத்துவரான டாக்டர் ஆர். குணசேகரன் உட்பட அறுவர் செய்து கொண்ட மேல்முறையீடு மீதான விசாரணை வரும் நவம்பர் 7 ஆம் தேதி புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் குணசேகரனின் வழக்கறிஞர் ஜாஸ்மின் சியோங் இதனை தெரிவித்தார். கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தங்களுக்கு எதிராக விதித்த மரண தண்டனையை எதிர்த்து 59 வயது டாக்டர் குணசேகரன், 51 வயது ரவிசந்திரன், 30 வயது ஆர்.டினேஸ்வரன், 29 வயது எ.கே தினேஷ் குமார், 32 வயது எம். விஸ்வநாத் மற்றும் 29 வயது எஸ்.நிமலன் ஆகிய அறுவரும் மேல்முறையீடு செய்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS