தலைமையாசிரியர் ஒருவர் ஐந்தாம் ஆண்டு மாணவனை பிரம்பால் அடித்து காயப்படுத்தியதாக கூறப்படும் சம்பவ தொடர்பில் விரிவான விசாரணை நடைபெறும் என்று கல்வி அமைச்சர் பத்லினா சிடெக் உறுதியளித்துள்ளார். செகாமட், ஜெமென்டா வட்டாரத்திலுள்ள தமிழ்ப்பள்ளியில் நிகழ்ந்ததாக போலீஸ் புகார் செய்யப்பட்ட இவ்விவகாரத்தில் தலைமையாசிரியர் குற்றம் இழைத்திருப்பது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். அதேவேளையில் போலீசார் மேற்கொள்ளும் புலன்விசாரணைக்கும் கல்வி அமைச்சு முழு ஒத்துழைப்பு நல்கும் என்று பத்லினா சிடெக் உறுதியளித்தார்.