ஒரு வீட்டில் புகுந்து குடும்ப மாதுவை மடக்கி 16 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களில் அந்த மாதுவின் கணவரும் அடங்குவர். அந்த நபர் காராக் வட்டாரத்தில் கோயில் ஒன்றின் பூசாரியாகவும் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. காப்புறுதி பணத்திற்காக தமது மனைவிக்கு தெரியாமலே கும்பல் ஒன்றை தயார்படுத்தி அந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுத்தியுள்ளது தெரியவந்துள்ள என்று பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹாம் ககார் தெரிவித்துள்ளார். இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த ஜுலை 17 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் காராக் ருகில் தாமான் ஹீஜாவ் என்ற இடத்தில் ஒரு வீட்டில் நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.