கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர், அதிகாலை 3 மணியளவில் கைது செய்யப்பட்டது, மக்களின் ஆதரவை பெறுவதற்கான மேற்கொள்ளப்பட்ட ஒரு கவன ஈர்ப்பு நடவடிக்கையாகும் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார்.
நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் இன்று திருவாய் மலர்ந்துள்ள அப்துல் ஹாடி அவாங், சனூசிக்கு எதிரான குற்றச்சாட்டின் தன்மை தெளிவின்றி இருப்பதாக வாதிட்டுள்ளார்.
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஷ் ஷாவை அவமதித்ததாக பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான சனூசிக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்ட போதிலும் சனூசிக்கு எதிரான கைது நடவடிக்கை, அதிகாலையில் நடத்து இருக்கக்கூடாது ஹாடி அவாங் குறிப்பிட்டார்.