பெல்டா நிலக்குடியேற்றக்காரர்கள் கடன் தள்ளுபடி விவகாரத்தில் தமக்கு எதிராக அவதூறு கூறியிருப்பதாக கூறி, பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினிடம் 20 கோடி வெள்ளி இழப்பீடு கோரி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மானநஷ்ட வழக்கை தொடுத்துள்ளார்.
அதேவேளையில் முகைதீன் யாசின்,தம்மிடம் 24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி, அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்றை டத்தோஸ்ரீ அன்வார் அனுப்பிவைத்துள்ளார்.
பெல்டா நிலக்குடியேற்றக்காரர்களுக்கான கடனை அன்வார் தள்ளுபடி செய்யவில்லை என்றும், தாம் பிரதமராக இருந்த காலத்தில்தான் அந்தக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அன்வார் பொய்யுரைக்கிறார் என்றும் அண்மையில் முகைதீன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.