வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான சித்தி கசிம்மிற்கு சொந்தமான காரின் அடிப்பாகத்தில் வெடிகுண்டைப் போல் ஒரு பொருள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்த அதனை சோதனையிடுவதற்கு வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோலாலம்பூரில் உள்ள வாகனப் பட்டறைக்கு அனுப்பிவைக்கப்பட்ட தமது காரில் அடிப்பாகத்தில் வெடிகுண்டைப் போல் ஒரு பொருள் இணைக்கப்பட்டுள்ளதாக வாகனப்பட்டறைப் பொறுப்பாளரிடமிருந்து கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து சித்தி காசிம் மிகுந்த பதற்றத்திற்கு ஆளானார்.
பின்னர் இது குறித்து அவர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு போலீசார், சித்தி காசிமின் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனப் பட்டறையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டு,அவ்விடத்தில் பாதுகாப்பு வளையத்தை கட்டினர்.
பின்னர் காரை சோதனையிடத் தொடங்கிய போலீசார் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக சமூக வலைத்தளத்தில் சித்தி காசிம் தெரிவித்துள்ளார்.