கெடா மாநிலத்தில் சட்டவிரோதமாக அரிய வகை கனிம சுரங்கத் தொழில் நடவடிக்கையில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் லஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் மேலும் ஒரு முக்கிய சந்தேகப் பேர்வழியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம் கைது செய்துள்ளது.
நிறுவனம் ஒன்றின் இயக்குநரான அந்த ஆடவர் நேற்று இரவு 10 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எஸ் பி ஆர் எம் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இத்துடன் இந்த கனிம வள திருட்டுத் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று பேராக உயர்ந்துள்ளது. ஏற்கனவே மந்திரி புசார் வாரியத்தின் தலைமை செயல் முறை அதிகாரி மற்றும் ஒரு பெண் இயக்குநர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.