ஹனோய் நூலக சாலைக்கு அன்வார் வருகை

வியட்நாமிற்கு இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைநகர் ஹனோய் யில் பிரபல ஹனோய் புக் ஸ்ட்ரீட் சாலைக்கு தமது துணைவியார் டத்தோஸ்ரீ வான் அஸிஸாவுடன் வருகை புரிந்தார்.

இவ்வருகையில், வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் னும் கலந்து கொண்டார். வியட்நாம் மக்களிடையே வாசிக்கும் பழக்கத்திற்கு ஊக்குவிக்கும் வகையில் முழுக்க – முழுக்க புத்தகக்கடைகள் வீற்றிருக்கும் ஹனோய் புத்தக வாசகசாலை, கடந்த 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும்.

இச்சாலையில் வியட்நாம் பிரதமருடன் தேநீர் உபசரிப்பில் கலந்து கொண்ட டத்தோஸ்ரீ அன்வார், நூல்கள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்து கொண்டார்.

அதேவேளையில் வியட்நாம் வருகையின் நினைவாக தாம் எழுதிய இரு நூல்களை டத்தோஸ்ரீ அன்வார், வியட்நாம் பிரதமருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

WATCH OUR LATEST NEWS