பினாங்கு மாநிலத்தில் பாஸ் கட்சி ஏற்பாட்டில் நடைபெற்ற பெரிக்காத்தான் நேஷனலில் மாபெரும் அரசியல் செராமாவில் கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவர் டோமினிக் லாவ், அவமதிக்கப்பட்டு, விரட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த உறுப்புக்கட்சித் தலைவருக்கு ஏற்பட்ட அவமரியாதையை சரி செய்யும் வகையில் மாபெரும் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்யுமாறு பினாங்கு மாநில பெரிக்காத்தான் நேஷனலுக்கு அதன் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த மாபெரும் நிகழ்வில் கதாநாயகராக டோனினிக் லாவ் விளங்கும் அதேவேளையில் அவர் போட்டியிடும் பினாங்கு, பாயான் லெப்பாஸ் தொகுதியில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து, அவர் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று முகைதீன் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் பெரிக்காத்தான் நேஷனலின் உறுப்புக்கட்சிகளான பெர்சத்து,பாஸ் மற்றும் கெராக்கான் ஆகியவற்றின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு டோமினிக்கிற்கு உரிய மாரியாதை வழங்க வேண்டும் என்று முகைதீன் உத்தரவிட்டுள்ளார்.
எனினும் தவறான புரிந்துணர்வின் கார ணமாக அந்த கசப்பான சம்பவம் டோமினிக் லாவிற்கும் பாஸ் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ளது என்று முகைதீன் விளக்கம் அளித்துள்ளார்.