12ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு முழுமையான ஆதரவைத் வழங்க மஇகா எடுத்துள்ள முடிவை செந்தோசா சட்டமன்றத் தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வரவேற்றுள்ளார்.
இந்திய சமூகத்தைப் பிரதிநிதிக்கும் கட்சியான மஇகாவின் இந்த முடிவு இந்திய சமூகத்தில் ஒற்றுமைக்கு வித்திட்டுள்ளதோடு நாட்டின் அரசியலிலும் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குணராஜ் வர்ணித்துள்ளார். பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவு தருவது என்ற மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் முடிவு பாரட்டப்பட வேண்டிய ஒன்று. இதர விவகாரங்களைக் காட்டிலும் சமூகத்தின் நலனுக்கு அக்கட்சி முக்கியத்துவம் தருவதை அக்கட்சியின் இந்த நிலைப்பாடு புலப்படுத்துகிறது என்று அவர் குணராஜ் குறிப்பிட்டார்.