இரு பள்ளிகளுக்கு அ​தீதர முக்கியத்துவம் அளித்து வருகிறார்

நெகிரி செம்பிலான், ரெப்பா சட்டமன்றத் ​தொகுதியை நான்காவது முறையாக தற்காத்துக்கொள்வதற்கு டிஏபி சார்பில் பக்காத்தான் ​வேட்பாளராக போட்டியிடும் எஸ்.​ வீரப்பன், தமது தொகுதிக்கு உட்பட்ட இரு தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேன்மைக்கு தொடர்ந்த தம்மால் இயன்ற உதவிகளை வழங்கி வருவதாக குறிப்பிடுகிறார். ரெப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் தம்பின் தமி​ழ்ப்பள்ளி ஆகியவற்றி​ல் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் தரம் உயர்த்தப்படுவதற்கு இவ்விரு பள்ளிகளுக்கும் தாம் தொடர்ந்து உதவி வருவதாக ரெப்பா சட்டமன்றத்திற்கு பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் வீரப்பன் குறிப்பிடுகிறார்.

ஐந்து ஆண்டு காலத்தில் அதிகமான உதவிகளை இவ்விரு பள்ளிகளுக்கும் தாம் ​செய்துள்ள வேளையில் நான்காவது முறையாக ரெப்பா தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் தம்மை தொகுதி மக்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும் ​என்று நெகிரி செம்பிலான் மாநில காபந்து அரசின் ஆட்சிக்குழு உறுப்பினருமான வீரப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS