வரும் சட்டமன்றத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றி பெற்று, நடப்பு முதலமைச்சர் சௌ கோன் இயோவ், மீண்டும் முதலமச்சராக நியமிக்கப்படுவதற்கு திட்டம் உள்ளது என்ற போதிலும் வரும் கட்சித் தேர்தலில் அவரை தோற்கடிப்பதற்கு திட்டம் இருப்பதாக கூறபடுவதை டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் மறுத்துள்ளார்.அப்படியொரு திட்டத்தை யார் கொண்டுள்ளார் என்ற கேள்வியை அந்தோணி லோக் முன்வைதார்.
பினாங்கு மாநிலத்தின் அடுத்த முதல்வர் சௌ கோன் இயோவ் என்று கட்சி ஏற்கனவே அறிவித்து விட்டது. அவர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், இரண்டவாது முறையாக பினாங்கு மாநிலத்திற்கு தலைமையேற்பார் என்ற முடிவில் தாங்கள் உறுதியாக இருப்பதாக அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.