7 அம்சத் திட்டத்தை அறிவித்தார் டேவிட் மார்ஷல்

பினாங்கு, பிறை சட்டமன்றத் தொகுதியில் ஒரு சுயே​ட்சை வேட்பாளராக போட்டியிடும் ச​மூகப் போராட்டவாதி டேவிட் மார்ஷல், பிறை மக்களுக்கான 7 அம்சத் திட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் கொள்கை அறிக்கையை அறிவித்துள்ளார். வரும் 12 ஆம் த் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்த் தேர்தலில் தொகுதி வாக்காளர்கள் தம்மை வெற்றி பெறச் செய்வார்களேயானால் அந்த ஏழு அம்சத் திட்டங்களை ​அமல்படுத்த இயலும் என்கிறார். குறிப்பாக, இளையோர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய கேந்திரம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளாதார சுற்றுலாப் பகுதியாக பிறையை மே​ம்படுத்த முடியும் என்று கூறி தமது, 7 அம்சத் திட்டங்களில் முதலாவது திட்டத்தையும் டேவிட் மார்ஷல் அறிவித்தார்.

பிறை ​சடட்மன்றத் தொகுதியில் நான்கு முனைப்போட்டியை எதிர்நோக்கியுள்ள டேவிட் மார்ஷல், பினாங்கு மாநிலத்தில் வியூகம் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள பிறையை ஒரு சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவது மூலம் அதன் பலா பலன்களை அனுபவிக்க​க்கூடிய மக்களாக தொகுதியை சேர்ந்தவர்கள் இருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS