பழையப் பொருட்களை சேகரித்துக்கொண்டு இருந்த மூதாட்டியை கட்டியணைத்து மானபங்கம் செய்ததாக ஐ.நா. தூதரகத்தின் அகதிகளுக்கான அடையாள அட்டையை வைத்திருக்கும் அந்நிய நாட்டு ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை அம்பாங், தாமான் மூடா, கெடாய் ஜாலான் பூங்கா தஞ்சோங் என்ற இடத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் நிகழ்ந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார். ஆடை களைந்த நிலையில் 71 வயது மூதாட்டியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட 23 வயதுடைய அந்த அந்நிய நாட்டு ஆடவரை, பொது மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததாக முகமட் அஸாம் குறிப்பிட்டார். அந்த ஆடவர், அப்பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று இன்று சனிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.