வரும் 12 ஆம் தேதி சிலாங்கூர் மாநிலத்தில் 56 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவிருக்கும் தேர்தலில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 65 விழுக்காட்டிற்கும் குறைவாக பதிவு செய்யப்படுமானால் கடந்த மூன்று தவணைக்காலம் பக்காத்தான் ஹராப்பானிால் ஆட்சி செலுத்தப்பட்டு வரும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் கவிழலாம் என்று டிஏபி எச்சரிக்கை விடுத்துள்ளது. 65 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்காளர்கள் தேர்தலில் பங்கு கொண்டு வாக்களித்தால் மட்டுமே சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் நான்காவது முறையாக தற்காத்துக்கொள்ள முடியும் என்று அத்தலைவர்கள் கூறுகின்றனர்.
வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்படும் பட்சத்தில் 56 சட்டமன்றத் தொகுதிகளில் 37 தொகுதிகள் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலுக்கு இது சாதகமான சூழலை ஏற்படுத்திவிடும் என்று அஞ்சப்படுவதாக டிஏபி தலைவர்கள் கூறுகின்றனர்.