பொது உயர்க் கல்விக்கூட்டங்களில் கோட்டா முறை அகற்றப்படாது – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் திட்டவட்டம்

நாடு சுதந்திரம் பெற்றது முதல் அரசாங்க உயர்க்கல்விக்கூடங்களில் மாணவர் சேர்ப்புக்கு ஓர் அளவுக்கோலாக பயன்படுத்ப்படும் கோட்டா முறை அகற்றப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டாக தெரிவித்துள்ளார். தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் தொடர்ந்து கோட்டா முறையை அமல்படுத்தி வரும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

நா​ட்டில் உயர்க்கல்விக்கூடங்களில் சமூகவிய​ல் நீதி உறுதிசெய்யப்படுவதற்கும், அதன் கோட்பாடு பராமரிக்கப்படுவதற்கும் கேட்டா முறை இன்றியமையாததாகும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். உயர்க்க​ல்விக்கூடங்களில் கோட்டா முறை அகற்றப்படுமானால் வருகின்ற அனைத்துப் பொதுத் தேர்தல்களிலும் ஒற்றுமை அரசாங்கம் தோல்வியை தழுவதற்கான ஆபத்து காத்திருப்பதாக பிரதமர் விளக்கினார்.

தவிர நாட்டின் வரலாறு, அதன் பின்னணி மற்றும் இனங்களுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட ச​​மூகவியல் ஒப்பந்தம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கோட்டா முறை நிலைநிறுத்தப்பட வேண்டுமே தவிர அதனை அகற்றுவதற்கான கோரிக்கையை விடுக்க முடியாது என்று பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS