பினாங்கு மாநிலத்தில் 4 புதிய பெர்ரிகள் இன்று சேவையை தொடங்கின. பட்டர்வொர்த்தில் சுல்தான் அப்துல் ஹலிம் படகுத்துறைக்கும், பினாங்கு, ராஜா ஊடாவிற்கும் இடையிலான 4 பெர்ரி சேவைகள் இன்று காலையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியதாக பினாங்கு முதலமைச்சர் சொன் கொன் யொ தெரிவித்தார்.
ஒவ்வொரு நாளும், பெருநிலத்திற்கும், பினாங்கு தீவிற்கு இடையில் வேலைக்கு சென்று வருகின்றவர்களுக்கு பெர்ரி பயணச் சேவை மிக முக்கியம் என்று சொன் கொன் யொ குறிப்பிட்டார்.
4 பெர்ரிகளுக்கும் புதிய தோற்றம் தரப்பட்டுள்ளது. தெலுக் பாஹாங், தெலுக் கம்ப்பி, தெலுக் டூயோங் மற்றும் தெலுக் கும்போர் என்று அவற்றுக்க பெயரிடப்பட்டுள்ளதாக சொன் கொன் யொ தெரிவித்தார்.
இதற்கு முன்பு சேவையை முடித்துக்கொண்ட 1986 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த பினாங்கு நில அடையாளத்தை தாங்கிய பெர்ரிகளுக்கு பதிலாக இந்த நான்கு பெர்ரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.