- பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் திட்டவட்டம்
வரும் 12 ஆம் தேதி நடைபெறும் 6 மாநிங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் வெற்றிப் பெறுமானால் மத்திய அரசாங்கம் மாற்றப்படும் என்று பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் சூளுரைத்துள்ளார்.
மத்திய அரசாங்கத்தை மாற்றுவதற்கு இந்த 6 மாநிலங்களில் பெரிக்காத்தான் நேஷனலின் வெற்றி மிக முக்கியமாகும் என்று நெகிரி செம்பிலான், ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பெரிக்காத்தான் நேஷனலின் துணைத் தலைவருமான ஹாடி அவாங் இதனை தெரிவித்தார்.
கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய மாநிலங்களில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெறுவது உறுதியாகும் என்று குறிப்பிட்ட ஹாடி அவாங், பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலன் ஆகிய இதர மூன்று மாநிலங்களில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாக ஹாடி அவாங் குறிப்பிட்டார்.