நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தொகுதியில் பலரது கவன ஈர்ப்பு தொகுதியாக லோபாக் சட்டமன்றத் தொகுதி விளங்குகிறது.
லோபாக் சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக் கொள்வதற்கு இரண்டாவது முறையாக போட்டியிடும் டி.ஏ.பி -யின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சியு சே யோங் -கிற்கு தங்களின் பிளவுப்படாத ஆதரவை தெரிவிக்கும் வகையில் லோபாக் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி உட்பட இதர அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் மக்கள் தங்கள் இல்லங்களில் பக்காத்தான் ஹராப்பான் கொடியை கட்டி தங்களின் ஆதரவையும் அன்பையும் புலப்படுத்தியுள்ளனர்.
இதில் லோபாக் முதன்மை அடுக்குமாடி பொது குடியிருப்பு பகுதியில் பக்காத்தான் ஹராப்பானை ஆதரிக்கும் பி.ஹ் சின்னத்தை தாங்கிய ராட்ஷச கொடியமைப்பு முறை 80 அடி நீளத்திற்கும் 48 அடி உயரத்திற்கும் கட்டப்பட்டிருப்பது பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சியு சே யோங் -கை நெகழ்ச்சியில் ஆழ்த்தியது.
இது தம்முடைய சேவைக்கு லோபாக் அடுக்குமாடி மக்கள் தந்துள்ள ஓர் அங்கீகாரமாக கருதுவதாக சியு சே யோங் பெருமிதம் தெரிவித்தார்.