6 மாநிலங்களை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றுமானால் மத்திய அரசாங்கத்தை மாற்ற முடியும் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறுவது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று அம்னோ உதவி தலைவர் முகமது காலித் நோர்டின் தெரிவித்துள்ளார்.
ஹாடி ஆவாங்கின் இந்த கூற்று, வாக்காளர்களை திசைத் திருப்பும் அதே வேளையில் குழப்பத்தில் ஆழ்த்தும் முயற்சியாகும் என்று உயர்கல்வி அமைச்சருமான காலித் நோர்டின் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சி விட்டு கட்சித் தாவினால் அவர், இயல்பாகவே தனது எம்.பி பதவியை இழக்கிறார் என்பதுடன் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட முடியாது என்பது நடப்பில் உள்ள கட்சித் தாவல் தடைச்சட்டம் வழியுறுத்துகிறது.
எனவே, மத்திய அரசாங்கத்தை மாற்றும் முயற்சியில் எந்தவொரு எம்.பி-யும் துணிய மாட்டார்கள் என்று காலித் நோர்டின் தெளிவுப்படுத்தினார்.