சித்தியவான் அருகில் பெர்சிசிரான் பந்தாய் பாராட் விரைவு நெடுஞ்சாலையின் 220 ஆவது கிலோ மீட்டரில் புரோத்தோன் சாகா ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்த சாலையை விட்டு விலகி தடம்புரண்டு தீப்பற்றிக்கொண்டதில் நால்வர் கருகி மாண்டனர்.
இச்சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப்படையினர் கொழுந்து விட்டு எரிந்த தீயை முழு வீச்சில் கட்டுப்படுத்தினர். எனினும் காரில் பயணம் செய்ய நால்வர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி கருகி மாண்டனர். ஒருவர் உயிர்தப்பியதாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.