கேளிக்கை மையத்தில் தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, நட்புறவுக்கொண்ட இரு அந்நிய நாட்டுப் பெண்களை கடத்திச் சென்று, 20 ஆயிரம் வெள்ளி பிணைப்பணம் கோரிய உள்ளூரைச் சேர்ந்த இரு ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட பெண்கள் கைகால்கள் கட்டப்பட்டு, ஓர் இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் அந்த பெண்களின் தோழிக்கு அனுப்பப்பட்டு , 20 ஆயிரம் வெள்ளி பிணைப்பணம் கோரப்பட்டுள்ளதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அ.அஅன்பழகன் தெரிவித்தார்.
பூச்சேங்கைச் சேர்ந்த 32, 35 வயதுடைய தங்கள் தோழிகளை கடத்திச் சென்ற அந்த இரு ஆடவர்களும், கேளிக்கை மையத்தில் தனக்கு அறிமுகமான நபர்கள் என்று கூறி, ஒரு வியாபாரியான அந்தப் பெண், போலீஸ் புகார் செய்துள்ளதாக அன்பழகன் குறிப்பிட்டார்.
பிணைப்பணம் தொடர்பில் அந்தப் பெண் பெற்ற தொலைபேசி அழைப்பை அடிப்படையாக கொண்டு போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அதே தினத்தன்று கிள்ளானில் 31, 35 வயதுடைய இரு நபர்களை போலீசார் கைது செய்ததுடன், இரு பெண்களும் காயமின்றி மீட்கப்பட்டுள்ளதாக அன்பழகன் குறிப்பிட்டார். கேளிக்கை மையங்களில் தங்களுக்கு அறிமுகமாகும் பெண்களை கடத்திச் சென்று, பிணைப்பணம் கோரும், தந்திரத்தை பிடிபட்ட இரு ஆண்களும் கையாண்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அன்பழகன் விவரித்தார்.